×

தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்..TNPSC நேர்முக தேர்வு ரத்து.: பாமக நிழல் நிதி அறிக்கை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்று பாமக சார்பில் வெளியிடப்பட்ட பொது நிழல் நிதி அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் 20-வது ஆண்டாக பாமக சார்பில் நிழல் நிதி அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், தனியார் நிறுவனங்களில் தமிழகர்களுக்கு 80% இடஒதுக்கீடு, தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுதல் உள்ளிட்ட நிழல் நிதி அறிக்கையின் முக்கிய அம்சங்களை தெரிவித்தார். மாநிலம் முழுவதும்  60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டாஸ்மாக் குறித்த கேள்விக்கு ஒன்றுக்கு பதில் அளித்த ராமதாஸ், மே 1-ம் தேதிக்குள் டாஸ்மாக்களை மூடவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும் திரைப்படங்களில் நாயகர்கள் மது அருந்தும், புகை பிடிக்கும் காட்சிகளை ராமதாஸ் விமசிர்த்தார். மேலும் TNPSC நேர்முக தேர்வு ரத்து, ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம், ஐஐடி நிகராக 5 இடங்களில் தொழில்நுட்ப  கல்வி நிறுவனங்கள் அமைத்தல், சென்னையில் அனைவருக்கும் இலவச பேருந்து பயணம், ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை உள்ளிட்ட 490 யோசனைகளை பாமகவின் நிழல் நிதி அறிக்கையில் இடம்பெற்று இருந்தது. …

The post தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்..TNPSC நேர்முக தேர்வு ரத்து.: பாமக நிழல் நிதி அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,TNPSC ,Phamaka ,Chennai ,Dinakaraan ,
× RELATED விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி...