×

எனது 30 வருட ஆதங்கம் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்

சென்னை: ‘மாமன்னன்’ படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவிலான டாப் 10 படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. அதில் மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும், அதனுடன் சேர்ந்து ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் இப்படம் இடம் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1.2 கோடி மக்கள் இத்திரைப்படத்தை பார்வையிட்டிருந்தார்கள். இப்படம் வெளியாகி 50 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டதை படக்குழு சென்னையில் கொண்டாடினர்.

இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ், கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், உதயநிதி ஸ்டாலின் கேடயம் பரிசாக வழங்கினார். இந்த விழா மேடையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியபோது, ‘மாமன்னன் திரைப்படம் எனக்குள் 30 வருடமாக இருந்த ஆதங்கம். ஏன் இப்படி நடக்கிறது என்று. என்னால் அதை இசையால் செய்ய முடியவில்லை. அதனால் அதை யார் செய்கிறார்களோ அவர்களோடு சேர்ந்து விட்டேன். வடிவேலுவின் ஒரு காட்சியை பார்த்த பின்பு தான் இந்த படத்தை மிகமிக சிறப்பாக கொண்டு போக வேண்டும் என்று நினைத்தேன்’ என்றார்.

The post எனது 30 வருட ஆதங்கம் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : AR Rahman Urukum ,CHENNAI ,Netflix ,Athangam AR Rahman Urukum ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...