×

விஜய் சேதுபதி-மிஷ்கின் இணையும் படம்: தாணு தயாரிக்கிறார்

சென்னை: விஜய் சேதுபதி-மிஷ்கின் இணையும் படத்தை தாணு தயாரிக்க உள்ளார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, ஓநாயும் குள்ளநரியும் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மிஷ்கின். இப்போது பிசாசு-2 படத்தை இயக்கி வருகிறார். அதே சமயம், பல்வேறு படங்களில் நடித்துள்ள மிஷ்கின், சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்ததாக விஜய்யின் லியோ படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிஷ்கின் நடித்திருந்தார். ஆனால். இருவரும் சேர்ந்து நடிப்பது போன்ற காட்சி படத்தில் கிடையாது. இப்போது பிசாசு-2 படத்தில் விஜய் சேதுபதியை சிறப்பு தோற்றத்தில் சில காட்சிகளில் மட்டும் மிஷ்கின் நடிக்க வைத்துள்ளார். இதில் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் பைனான்ஸ் பிரச்னையால் தடைபட்டுள்ளது. இதற்கிடையே தனது அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என மிஷ்கின் கூறிவந்தார். இது உறுதியாகியுள்ளது. இப்படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார்.

The post விஜய் சேதுபதி-மிஷ்கின் இணையும் படம்: தாணு தயாரிக்கிறார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Sethupathi ,Mishkin ,Thanu ,Chennai ,Myshkin ,Chitram Bechuthadi ,Pisasu ,Kollywood Images ,
× RELATED என்னையும் பூர்ணாவையும் தப்பா...