×
Saravana Stores

விடுதலை 2 கதையை சொல்லும் திருக்குறள்

சென்னை: விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் படம் விடுதலை 2. வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு போஸ்டரில் கையில் ஆயுதத்துடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் விஜய் சேதுபதி ஓடி வருவது போன்றும், மற்றொரு போஸ்டரில் விஜய் சேதுபதியும், மஞ்சு வாரியரும் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களிலும் ‘உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்’ என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது. இக்குறளின் பொருள், பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார் என்பதாகும். இது இரண்டாம் பாக கதையை சொல்லும்படியான குறள் என படக்குழு சொல்கிறது.

The post விடுதலை 2 கதையை சொல்லும் திருக்குறள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vithuthya ,Chennai ,Vijay Sethupathi ,Suri ,Vimithya ,Vetimaaran ,Kollywood Images ,
× RELATED டாக்டர் மகன் டாக்டராகலாம் நடிகர் மகன்...