×

மலேசியாவில் படமான ‘லாக்டவுன் நைட்ஸ்’

சென்னை: ஷாம் நடிப்பில் அமெரிக்காவில்உள்ள லாஸ்வேகாஸில் படமாக்கப்பட்டு வெளியான ‘காவியன்’ என்ற படத்தை தயாரித்த 2எம் சினிமா வினோத் சபரீஷ், தற்போது கிஷோர், பூஜா காந்தி நடித்துள்ள ‘சம்ஹரிணி’ என்ற கன்னடப் படத்தை தயாரித் துள்ளார். இந்தப்படம் விரைவில் வெளியாகிறது. இதையடுத்து வெற்றி ஹீரோவாக நடிக்கும் ‘லாக்டவுன் நைட்ஸ்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். ‘பூ சாண்டி வரான்’ நாயகி ஹம்ஷினி பெருமாள் ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் கங்கை அமரன், மதியழகன், லோகன், கோமளா நாயுடு நடித்துள்ளனர்.

சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். சினேகன், சாரதி பாடல்கள் எழுதிஇருக்கின்றனர். அர்த்த னாஸ் டிரேடிங் சுபாஷ் இணை தயாரிப்பு செய்து உள்ளார். திரைக்கு வந்த ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டான்லி, ‘லாக்டவுன் நைட்ஸ்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் லுக்கை விஜய் ஆண்டனி வெளியிட்டார்.

The post மலேசியாவில் படமான ‘லாக்டவுன் நைட்ஸ்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Malaysia ,Chennai ,2M Cinema ,Vinod Sabareesh ,Las Vegas ,Shaam ,Kishore ,Pooja Gandhi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விமானத்தில் புகைபிடித்த...