×

போலி பாஸ்போர்ட் ஒருவர் கைது

 

திருச்சி, ஜூலை 25: போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா சென்று வந்தவரை திருச்சி ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கேமாமந்தல் வஉசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன்(37). மலேசியா கோலாலம்பூரில் இருந்து திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், பிறந்த தேதியை மாற்றம் செய்து போலி பாஸ்போர்ட் பெற்று மலேசியா சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து அறிவழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

The post போலி பாஸ்போர்ட் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Airport ,Malaysia ,Kemamanthal Vausi Nagar, Kallakurichi district ,Kuala Lumpur, Malaysia ,
× RELATED திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்...