×

தமன்னாவின் கையை பிடித்து இழுத்த ரசிகர்: விழாவில் பரபரப்பு

சென்னை: ரசிகர் ஒருவர் தமன்னாவின் கையை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் தமன்னா. அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பாளர்களை மீறி தமன்னாவிடம் பாய்ந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விழாவுக்காக தமன்னா நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எங்கிருந்தோ வந்த வாலிபர், திடீரென தமன்னாவின் கையை பிடித்து இழுக்க முயன்றார். உடனே அந்த ரசிகரை, பவுன்சர்கள் அலேக்காக தூக்கியதை பார்த்த தமன்னா, அந்த ரசிகரை மீண்டும் அழைத்து, அவரை ஆசுவாசப்படுத்தி, என்ன வேண்டும் என கேட்டார். அவரோ ஒரு செல்பி எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். உடனே சிரித்த முகத்தோடு அந்த ரசிகரின் செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார் தமன்னா. நிதானமாகவும் ரசிகருடன் அன்பாக நடந்து கொண்ட இந்த செயலுக்காகவும் தமன்னாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

The post தமன்னாவின் கையை பிடித்து இழுத்த ரசிகர்: விழாவில் பரபரப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tamannaah ,Chennai ,Kollam, Kerala ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சமூக வலைதளங்களில் காதலியின் ஆபாசப் படங்களை வெளியிட்டவர் கைது