×

நாடகத்தால் கிடைத்த வாய்ப்பு

தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் பரியா அப்துல்லா, ‘வள்ளி மயில்’ படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் நாடகக்கலைஞர் வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தெருக்கூத்து நாடகங்களில் நடிக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. வள்ளி மயில் என்ற கேரக்டரில் நான் நடிக்கிறேன். இதற்கு முன்பு நான் மேடை நாடகங்களில் நடித்திருப்பதால், இப்படத்தில் நடிக்க எளிதாக இருந்தது. இன்னும் சொல்வது என்றால், நான் மேடை நாடகத்தில் நடித்திருந்த அனுபவத்தால் மட்டுமே இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது எனலாம்.

கோயில்களில் நடக்கும் தெருக்கூத்து நாடகங்கள் பற்றி எனக்கு தெரியாது. அதுதொடர்பான வீடியோக்களை இயக்குனர் சுசீந்திரன் கொடுத்தார். அதைப் பார்த்து நடிக்க கற்றுக்கொண்டேன். திண்டுக்கல் தெரு நாடகக்கலைஞர் ஒருவர் எனக்கு பயிற்சி அளித்தார். தெருக்கூத்து மேடையில் உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவர் கற்றுக்கொடுத்தார். ‘வள்ளி மயில்’ படத்தில் விஜய் ஆண்டனி, பாரதிராஜா, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என்றார்.

The post நாடகத்தால் கிடைத்த வாய்ப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Pariya Abdullah ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சூப்பர் ஸ்டாருக்கு என்ன ஆச்சு? செல்போனை உடைக்க பார்த்த அமிதாப் பச்சன்