×

ஏஐ தொழில்நுட்பத்தில் சத்யராஜ்

எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப் நடித்துள்ள படம், ‘வெப்பன்’. பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ‘சவாரி’ படத்தையும், ஓடிடியில் வெளியான ‘வெள்ளை ராஜா’ தொடரையும் இயக்கிய குகன் சென்னியப்பன், ‘வெப்பன்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘சஸ்பென்ஸ் நிறைந்த ஆக்‌ஷன் திரில்லர் படமான இதில், யாராலும் அழிக்க முடியாத மனித ஆயுதமாக சத்யராஜ் ரோல் அமைந்துள்ளது. காட்டில் அநாதையாக அலைந்து திரியும் குட்டி யானைகளைப் பாதுகாத்து வளர்ப்பது அவரது வேலை. அவருடன் படம் முழுக்க நிஜ குட்டி யானை ஒன்று நடித்துள்ளது.

கேரளாவிலுள்ள வாகமன் பகுதியில் கதை நடக்கிறது. சத்யராஜூக்கு சூப்பர் பவர் எப்படி கிடைத்தது என்பதை விளக்கும் பிளாஷ்பேக் காட்சிக்காக, ஏஐ தொழில்நுட்பத்தில் இளம் வயது சத்யராஜ் தோற்றத்தை உருவாக்கினோம். இந்திய சினிமாவில் ஏஐ மூலம் கிராபிக்ஸ் பணிகள் மேற்கொள்வது இதுவே முதல்முறை. யூடியூபர் வேடத்தில் வசந்த் ரவி நடிக்கிறார்’ என்றார்.

The post ஏஐ தொழில்நுட்பத்தில் சத்யராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sathyaraj ,MS Mansoor ,Vasanth Ravi ,Rajeev Menon ,Tanya Hope ,Prabhu Raghav ,Ghibran ,Gugan Chenniappan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி