×

நெப்போலியன் தயாரித்து நடிக்கும் படம்

திரைத்துறை மற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ள நெப்போலியன், தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் குடியேறி விட்டார். அங்கு மிகப்பெரிய பண்ணை வைத்து விவசாயம் செய்கிறார். தமிழில் ஏதாவது படத்தில் ஒப்பந்தமானால், இந்தியாவுக்கு வந்து நடித்துவிட்டு செல்கிறார். இந்நிலையில் அவர் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘அமெரிக்க ஆவி’ என்று பெயரிட்டுள்ளார். இதுகுறித்து நெப்போலியன் வெளியிட்ட பதிவில், ‘ரசிகர்களின் அன்பு மற்றும் ஆசியுடன் பல்வேறு மொழிகளில் நிறைய படங்களில் நடித்தேன். தற்போது நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நான் நடிக்க முடிவு செய்து, அப்படத்தை எனது மகன்கள் தனுஷ், குணால் தயாரிக்க ஏற்பாடு செய்துள்ளேன்.

அதற்கான கதை தேர்வு கடந்த சில மாதங்களாக நடந்தது. இதுவரை ஏராளமான கேரக்டர்களில் நடித்திருந்தாலும், இதில் நான் இதுவரை நடிக்காத ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறேன். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அனைத்து தரப்பினரும் விரும்பி பார்க்கும் வகையில், நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்குகிறோம். அமெரிக்காவில் முழு படப்பிடிப்பும் நடக்கிறது. தஞ்சை ஜேபிஆர் எழுதி இயக்குகிறார். ஏற்கனவே அவர் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அடுத்த மாதம் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Napoleon ,Tamil ,India ,
× RELATED தியேட்டரில் திடீரென்று உயிரிழந்த ரசிகர்