×

விருதுநகர் அருகே பந்தல்குடியில் ரூ.5 கோடியில் சுற்றுச்சூழல் சீரமைப்பு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: விருதுநகர் மாவட்டம், பந்தல்குடியில் ராம்கோ சிமெனட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.5.20 கோடியில், செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்எல்ஏக்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ்.தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், ஜி.அசோகன், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், கலெக்டர் ஜெ.மேகநாத ரெட்டி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, பி.வி.நிர்மலா  வெங்கட்ராமராஜா, பி.வி.அபினவ் ராமசுப்பிரமணியராஜா, தலைமை செயல் அலுவலர் ஏ.வி.தர்மகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த சுற்றுச்சூழல் பூங்கா, நீர்நிலைப்பாதை, வறண்ட நிலத்தாவரங்கள், கற்றாழை அடினியம் தோட்டம், பந்தல்பூங்கா, புல்வெளி மற்றும் கல்பூங்கா என பிரிக்கப்பட்டு வருகை தரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பூங்காவில் சுரங்கத்தில் உள்ள தேவையற்ற கற்கள் மற்றும் உள்ளூர் செடிகளால் உருவாக்கப்பட்டுள்ள கல்பூங்கா, நடைபாதை, 40 ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய மண்ணின் மரங்களான வேம்பு, புங்கம், அரசு, அத்தி, ஆலமரம். வாகை, நாவல், வில்வம், விலா, இலந்தை, மகிழம், நீர்மருது, கோனவேல், செம்மரம், மஞ்சநெத்தி, நொச்சி, ஆவாரை போன்றவைகளும், வறட்சி மற்றும் நீரில் வாழும் நாட்டு மரங்களான கருவேலம், வெல்வேலம், குடைவேல் போன்ற மரங்களையும், சுமார் 200 இனங்களைக் கொண்ட மர வகைகள், புதர் செடி, கொடி வகைகள், கள்ளி, கற்றாழை, நித்ய கல்யாணி, கற்பூரவள்ளி, தூதுவளை, கரிசிலாங்கன்னி, புல் போன்ற தாவரங்களும் இப்பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சுமார் 2.50 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் புதர்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. 2023முடிவில் 5 லட்சம் நாட்டு மரக்கன்றுகள் 400 ஏக்கர் பரப்பளவில் நட திட்டமிடப்பட்டுள்ளது….

The post விருதுநகர் அருகே பந்தல்குடியில் ரூ.5 கோடியில் சுற்றுச்சூழல் சீரமைப்பு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Crore Environment Park ,Panthalgudi ,Virudhunagar ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Ramco Cements ,Virudhunagar district ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்