×

மம்மூட்டி படத்தில் திருப்புமுனை கேரக்டர்: ஐஸ்வர்யா மகிழ்ச்சி

சென்னை: தமிழில் ரிலீசான ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஆப்பிள் பெண்ணே’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரா’, ‘தமிழ்ப்படம் 2’, ‘நான் சிரித்தால்’, ‘வேழம்’ ஆகிய படங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன், பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். கடந்த மாதம் திரைக்கு வந்த பான் இந்தியா படமான ‘ஸ்பை’ என்ற படத்தை தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்போது அவர் மம்மூட்டி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் மம்மூட்டி சாரின் தீவிர ரசிகை. அவருடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும். இப்போது அது நிறைவேறி உள்ளது. மலையாளத்தில் அவருடன் ‘பஸூகா’ என்ற படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தில் இளம் ஹீரோவுக்கு ஜோடியாக, கதைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். இதை டீனோ டென்னிஸ் இயக்க, தியேட்டர் ஆப் ட்ரீம்ஸ் தயாரிக்கிறது. மலையாள மெகா ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் மம்மூட்டி, ஷூட்டிங்கில் மிக எளிமையாகவும், பாசமாகவும் பழகும் விதம் என்னை வியக்க வைத்தது. அவருடன் இணைந்து நடிப்பது எனது திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம் என்று சொல்லலாம். தமிழில் புதுப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடக் கிறது. அதுபற்றி நான் தகவல் சொல்வேன்.

The post மம்மூட்டி படத்தில் திருப்புமுனை கேரக்டர்: ஐஸ்வர்யா மகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aishwarya Chalas ,CHENNAI ,Aishwarya Menon ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்