×

‘மரகத நாணயம்’ 2ம் பாகம்: இயக்குனர் தகவல்

சென்னை: ஆதி, நிக்கி கல்ராணி நடித்த ‘மரகத நாணயம்’, ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ‘வீரன்’ ஆகிய படங்களை இயக்கியவர், ஏ.ஆர்.கே.சரவன். தற்போது அவரது இயக்கத்தில் ‘மரகத நாணயம்’ படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. இதுகுறித்து அவர் கூறுகை யில், ‘தற்போது நான் அடுத்தடுத்து படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளேன். ஆதி, நிக்கி கல்ராணி ஜோடியுடன் ‘மரகத நாணயம்’ படத்தில் பணியாற்றிய அதே குழுவினருடன் இணைந்து ‘மரகத நாணயம்’ படத்தின் 2ம் பாகத்தை இயக்குகிறேன். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த பின்பு, விஷ்ணு விஷால் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத் துடன் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளேன்’ என்றார்.

The post ‘மரகத நாணயம்’ 2ம் பாகம்: இயக்குனர் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,A.R.K.Saravan ,Aadhi ,Nikki Kalrani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்