×

அதிர்ச்சி அடைந்த தமன்னா

பான் இந்தியா நடிகையாக மாறியுள்ள தமன்னா, திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள், விளம்பரங்களில் பிசியாக நடித்து வருகிறார். ரஜினிகாந்துடன் ‘ஜெயிலர்’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’ போன்ற படங்களில் நடிக்கும் அவரது கையில் மிகப்பெரிய மோதிரத்துடன் காட்சியளிக்கும் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அது வைர மோதிரம் என்றும், உலகின் 5வது பெரிய வைரம் என்றும், பான் இந்தியா நடிகராக மாறியுள்ள ராம் சரண் மனைவி உபாசனா அந்த வைர மோதிரத்தை தமன்னாவுக்குப் பரிசளித்தார் என்றும் தகவல் வெளியானது. அதன் மதிப்பு ₹2 கோடி என்றும் கூறப்பட்டது. இத்தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த தமன்னா, ‘போட்டோஷூட்டுக்காக தற்செயலாக அணிந்த பாட்டில் ஓப்பனர் இது. மற்றபடி அது வைரம் இல்லை’ என்றார்.

The post அதிர்ச்சி அடைந்த தமன்னா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tamanna ,Pan India ,Tamannaah ,Rajinikanth ,Chiranjeevi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வாரணாசியில் தமன்னா படப்பிடிப்பு