×

உக்ரைனில் பரிதவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்: நாடு திரும்பிய மாணவன் கண்ணீர் மல்க கோரிக்கை

தாம்பரம்: குரோம்பேட்டை சேம்பர்ஸ் காலனியை சேர்ந்தவர் அபுபக்கர். கார்கோவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா. இவர்களுக்கு ஸ்மா என்ற மகளும், ஷகீர் என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஷகீர் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றார். இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையே கடும்போர் ஏற்பட்டதால், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மருத்துவம், உயர்கல்வி படிப்பதற்காக அங்கு சென்ற ஏராளமான மாணவ, மாணவியர் பாதுகாப்பு கேள்விக்குறியானது. குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டதால், பலரும் உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுடன் இணைந்து, அந்நாட்டில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், காணொலி காட்சி மூலமாக, அவர்களுடன் உரையாடினார். இந்நிலையில், உக்ரைனில் இருந்து ஷகீர், சிறப்பு மீட்பு விமானம் மூலம்  சகீன் ருமேனியா வழியாக டெல்லி வந்து, அங்கிருந்து சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர், வீட்டுக்கு வந்த ஷகீரை தாயார் ஷகிலா மற்றும் உறவினர்கள் வரவேற்றனர். பின்னர் ஷகீர் நிருபர் களிடம் கூறுகையில்,‘‘என்னைப்போல பல மாணவர்கள் உக்ரைனில்  சிக்கி தவிக்கின்றனர். அவர்களையும் அரசு பாதுகாப்பாக மீட்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்….

The post உக்ரைனில் பரிதவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்: நாடு திரும்பிய மாணவன் கண்ணீர் மல்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ukraine ,Malka ,TAMBARI ,Abukar ,Chrompet Chambers Colony ,Gargo ,shakila ,TN ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...