புழல்: புழல் அருகே புத்தாகரம், கடப்பா சாலையில், கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம் கட்டப்பட்டு இயங்கி வந்தது. இந்த உணவகம், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக, உயர் நீதிமன்றத்தில் அப்பகுதி மக்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீர்நிலையில் கட்டப்பட்ட அம்மா உணவகத்தை அகற்ற உத்தரவிட்டது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அம்மா உணவகத்தை இடித்து அகற்ற தொடங்கினர். தகவலறிந்த அப்பகுதி அதிமுக நிர்வாகிகள் அங்கு வந்து, மாநகராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு, இரவு நேரத்தில்தான் அம்மா உணவகத்தை இடிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதா, எனக்கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் புழல் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, மாநகராட்சி அதிகாரிகளிடம் அம்மா உணவகத்தை அகற்றும் பணிகளை காலையில் தொடருங்கள் என அறிவுறுத்தினர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். …
The post நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அம்மா உணவகம் அகற்றம்: அதிமுகவினர் முற்றுகை appeared first on Dinakaran.