×

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கங்கனா

சென்னை: பாலிவுட்டில் மார்க்கெட் இழந்துவிட்ட கங்கனா ரனவத், இப்போது தமிழில் ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த முடித்துள்ளார். இப்படம் விநாயகர் சதுர்த்தி தினத்தில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் மீண்டும் தமிழில் கங்கனா நடிக்க இருக்கிறார். கங்கனா, மாதவன் இணைந்து அந்த தமிழ் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென மாதவனுக்கு பதிலாக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய படத்தை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கிறது. மலையாள இயக்குநர் விபின் இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை.
மேலும் இப்படம் சைக்கோ திரில்லர் கதை களத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்க உள்ளது.

The post விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கங்கனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kangana ,Vijay Sethupathi ,Chennai ,Kangana Ranaut ,Bollywood ,Raghava Lawrence ,Ganesha Chaturthi day ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நான் இன்னும் இருட்டுல தான் இருக்கேன்! - Vijay Sethupathi speech at Kozhipannai Chelladurai Pressmeet