×

வங்கதேசம் த்ரில் வெற்றி

சாட்டோகிராம்: ஆப்கானிஸ்தான் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், அபிப் உசேன் – மெஹிதி மிராஸ் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆப்கான் அணி 49.1 ஓவரில் 215 ரன் குவித்து ஆல் அவுட்டானது. நஜிபுல்லா ஸத்ரன் அதிகபட்சமாக 67 ரன் விளாசினார். ரகமத் ஷா 34, கேப்டன் ஹஸ்மதுல்லா 28, முகமது நபி 20 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 11.2 ஓவரில் 45 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், அபிப் உசேன் – மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி அபாரமாக விளையாடி ரன் சேர்க்க, வங்கதேசம் 48.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து வென்றது. அபிப் 93 ரன் (115 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), மிராஸ் 81 ரன்னுடன் (120 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கான் பந்துவீச்சில் பஸல்லாக் பரூக்கி 4 விக்கெட் கைப்பற்றினார். மிராஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை நடக்கிறது….

The post வங்கதேசம் த்ரில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : BANGLADESH ,Afghanistan team ,Abib Hussain ,Mehidi Miras ,Bangladesh Thrill ,Dinakaraan ,
× RELATED மேற்கு வங்கம், வங்கதேசத்தில் கடும்...