×

ஜெயிலர் படத்தின் தலைப்பை மாற்ற கோரி ரஜினிக்கு மலையாள இயக்குனர் கடிதம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்த படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் சேர்த்து ஜெயிலர் என்கிற பெயரிலேயே வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மலையாள திரையுலகை சேர்ந்த இயக்குனர் சகீர் மாடத்தில் என்பவர் மலையாளத்தில் வெளியாகும் ஜெயிலர் படத்திற்கு வேறு டைட்டிலை மாற்றி வைக்கும்படி பட தயாரிப்பு நிறுவனத்திற்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும் கடிதம் எழுதி இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இவர் தற்போது மலையாளத்தில் இளம் நடிகரும், நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் ட்ராமா படத்தை இயக்கியவருமான நடிகர் தயன் சீனிவாசன் நடித்துள்ள படத்தை ஜெயிலர் என்கிற பெயரில் இயக்கியுள்ளார். கடந்த வருடமே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டாலும் ஜெயிலர் என்கிற டைட்டிலை இவர் 2021லேயே பதிந்து வைத்து விட்டாலும் தங்களது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் அறிவிக்கலாம் என முடிவு செய்திருந்தாராம்.

ஆனால் அதற்குள்ளாக ரஜினிகாந்ததின் பட தயாரிப்பு நிறுவனம் இந்த ஜெயிலர் டைட்டிலை அறிவித்து விட்டது. தனது படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருவதால் கேரளாவில் இந்த பட வெளியீட்டின் போது குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மலையாளத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு வேறு டைட்டில் வைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளார். இவர் இயக்கியுள்ள படமும் எம்ஜிஆர் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்தை போல ஒரு ஜெயில் அதிகாரி சிறையில் உள்ள குற்றவாளிகளை திருத்தி நல்வழிப்படுத்தும் கதையாக உருவாகியுள்ளது என்பதால் ஜெயிலர் டைட்டில் பொருத்தமாக இருக்கும் என தான் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

The post ஜெயிலர் படத்தின் தலைப்பை மாற்ற கோரி ரஜினிக்கு மலையாள இயக்குனர் கடிதம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : malayalam ,rajini ,rajinikanth ,nelson dilipkumar ,India ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்த ரஜினியால் பரபரப்பு