×

எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்குட்பட்ட இடைப்பாடி நகராட்சி திமுக வசமானது: வீடு இருக்கும் வார்டிலும் அதிமுக தோல்வி

சேலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் இடைப்பாடி நகராட்சி, 50 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த தேர்தலில் திமுக வசமாகி உள்ளது. மொத்தமுள்ள 30 வார்டுகளில் திமுக 17 இடங்களிலும், அதிமுக 13 இடங்களையும் பிடித்துள்ளது. அதேபோல எடப்பாடி பழனிசாமியின் வீடு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ளது. சேலம் மாநகராட்சியின் 23வது வார்டுக்குட்பட்ட இங்கு திமுக  வெற்றி வாகை சூடியது. இங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இந்திராவை விட  திமுக வேட்பாளர் சிவகாமி 1,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். முன்னாள் முதல்வர் தொகுதி மற்றும் வீடு இருக்கும் பகுதியிலேயே திமுக வெற்றி பெற்றிருப்பது அதிமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

The post எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்குட்பட்ட இடைப்பாடி நகராட்சி திமுக வசமானது: வீடு இருக்கும் வார்டிலும் அதிமுக தோல்வி appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Edappadi Municipality ,DMK ,AIADMK ,Salem ,Tamil Nadu ,Salem District Eadappadi Municipality ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ...