×

அதிகமான நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் வாசன் கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பிரதான தொழிலான விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. குறிப்பாக விவசாயத்தொழிலைப் பாதுகாக்க விளைந்த, அறுவடையான நெல்லை கொள்முதல் செய்து, பாதுகாத்து, விற்பனைக்கு கொண்டு சென்று, உரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் பணிக்கு போதிய பணியாளர்கள் இல்லை என்பதையும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவ்வப்போதே வழங்கப்படவில்லை என்பதையும் சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அதிகமான நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vasan ,CHENNAI ,Tamaka ,President ,G.K. ,Tamil Nadu ,
× RELATED திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு...