- சீமன்
- ஆர்எஸ்எஸ்
- திருமாலவன்
- Avaniapuram
- சீமான்
- விசிகா தலைவர் திருமாவலவன் கூறினார்
- மதுரை, பெருங்குடி
- ஆங்கிலப் புத்தாண்டு
- விடுதலை சோதனைகள்
அவனியாபுரம்: ஆர்எஸ்எஸ் எண்ணத்தை சீமான் பிரதிபலிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மதுரை, பெருங்குடி பகுதியில், 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேற்று கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலைச்சிறுத்கைகள் கடசித் தலைவர் திருமாவளவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணனுக்கும், தம்பிக்கும் சண்டை மூட்டுவது தான் திராவிடம் என்கிறார் சீமான். தமிழ் தேசியம் என்பது பல ஆண்டுகளாக இந்த மண்ணில் பேசப்படும் அரசியல். ஆனால் அவரது அரசியல் பேச்சில், பெரியார் வெறுப்பு ஆழமாக உள்ளது. பெரியாரை பார்ப்பனர்கள் போல் சீமான் விமர்சிப்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது. இதன் உச்சக்கட்டடமாக பாரதி விழாவில் பங்கேற்ற அவர், பிராமண கடப்பாரை உதவியுடன் திராவிட இருப்பை தகர்ப்பேன் என்றார்.
அடிப்படைத் தத்துவத்தையே கேள்விக்குள்ளாக்குகிறார். எனவே, இவர் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டாரோ என்ற கவலை தோன்றுகிறது. அவர்களின் கருத்தை, இவர் தனது பாணியில் பேசுகிறார். எச்.ராஜா, குருமூர்த்தியின் அரசியலை அப்படியே இவர் பேசுகிறார். ஆர்எஸ்எஸ் நினைப்பதை பிரதிபலிக்கிறார். இந்த நிலையிலிருந்து அவரது கருத்தை விமர்சித்தோம். எங்களுக்கு அவர் மீது தனிப்பட்ட வெறுப்பு ஏதும் இல்லை.
பாஜவில் பல மூத்த தலைவர்களுடன் எனக்கு பழக்கம் இருக்கிறது. ஆனால் அவர்கள் அரசியலை உள்வாங்கி நான் பிரதிபலிக்கவில்லை. ஆனால் சீமான் தமிழ் தேசியம் என்ற பெயரில், பெரியார், அம்பேத்கரை கேள்விக்குள்ளாக்குவது, இடதுசாரி அரசியலுக்கே வேட்டு வைக்கும் முயற்சியாகவே உள்ளது. ஆட்சியில் பங்கு கேட்போம் என்று காங்கிரஸ் கட்சியில் சிலர் கூறலாம். நாங்கள் அப்படி கேட்கவில்லை. தனது மகனுக்கு கார்த்திகேயன் என்று பெயர் வைத்துள்ளதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். ஏன் முருகன் என வைக்கவில்லை என்று தான் நான் ேகட்டேன். எங்கள் தமிழ்க் கடவுள் முருகன். அந்த பெயரை அப்படியே வைக்காமல் ஏன் கார்த்திகேயன், சுப்பிரமணியம் என்று ஏன் வைக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன். இவ்வாறு கூறினார்.
