×

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை:
கடந்த 2009 ஜூன் 1ம்தேதிக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.8370 வழங்கப்படுகிறது. அதே சமயம் அந்த தேதிக்கு பிறகு 2009ல் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5200 வழங்கப்படுகிறது. இந்த முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கடந்த 3 நாட்களாக போராடி வருகின்றனர்.

இந்த ஊதிய முரண்பட்டால் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தினர் கூறி வருகின்றனர். எனவே போராடுகின்ற ஆசிரியர் சங்கத்தின் தலைவர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், போராடும் 1,400 ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : M. Veerapandian ,Chennai ,Communist Party of India ,State Secretary ,
× RELATED பா.ஜ.வின் குரலாக பேசி வருவதை ஏற்க...