×

‘லால் சலாம்’ படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் ரஜினி நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் மொய்தீன் பாய் என்ற வேடத்தில் டானாக கிட்டத்தட்ட பாட்ஷா மாதிரியான கேரக்டரில் ரஜினி நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. இந்நிலையில் தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரஜினி நிறைவு செய்துள்ளார். இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி அவரை வழி அனுப்பி வைத்தனர்.

The post ‘லால் சலாம்’ படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினிகாந்த் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajinikanth ,Aishwarya ,Vishnu Vishal ,Vikrant ,Jeevita ,Rajini ,AR Rahman ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என்...