×

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களின் வாடகையை காசோலையாக வாங்க அனுமதி: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை

சென்னை: இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்களின் வாடகையை காசோலை (செக்) மூலம் வசூல் செய்ய அனுமதி அளித்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அறநிலையத்துறைக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் குத்தகைதாரர்கள் மற்றும் வாடகைதாரர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டிய கேட்புத்தொகையை வசூல் செய்யும் பொழுது காசோலை மூலமாக வசூலிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், கேட்புத் தொகையை வசூல் செய்யும்போது கேட்பு வரைவோலை பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தெரிவித்து, காசோலை மூலமாக வசூல் செய்ய சிறப்பு அனுமதி வழங்குமாறு சார்நிலை அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதை ஏற்றும், கோயில் நிலங்கள் அரசு நிறுவனங்களுக்கு வாடகை மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள இனங்களில் தொகையினை காசோலை மூலமாக மட்டுமே அரசு நிறுவனங்கள் செலுத்த இயலும் என்ற சூழ்நிலையிலும் வாடகைத் தொகையை நிபந்தனைகளுடன் காசோலை மூலமாக வசூல் செய்திட அனுமதி வழங்கப்படுகிறது.அதன்படி, காசோலை மூலம் வசூல் செய்யும்பொழுது, வாடகைதாரர்கள் தங்களால் வழங்கப்படும் காசோலைக்குரிய தொகை வங்கி கணக்கில் உள்ளது எனவும், வங்கி கணக்கில் போதிய தொகை இல்லாமல் காசோலை திருப்பப்பட்டால் தங்கள்/ வாடகைதாரர்கள் மேல் நடவடிக்கைக்கு எடுக்கப்படும் குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவதற்கான சம்மத கடிதத்துடன் காசோலையை பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பாக சம்மத மாதிரி படிவத்தில் வாடகைதார்களிடம் எழுதி பெற வேண்டும்.* குத்தகை மற்றும் வாடகை தொகையை வசூல் செய்யும்பொழுது, நாளது தேதி மட்டுமே குறிப்பிட்டு காசோலை பெற வேண்டும். எக்காரணம் கொண்டும் பின் தேதியிட்ட காசோலையை பெறக்கூடாது.* காசோலையை நிபந்தனையுடன் பெற்றுக்கொள்ளும் சமயம், எந்தவொரு காரணத்திற்காகவும், வாடகை/குத்தகை தொகை கோயில் கணக்கில் சேரும் வரை ஒப்புகை சீட்டு (ரசீது) வழங்கப்படுதல் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களின் வாடகையை காசோலையாக வாங்க அனுமதி: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Hindu Institute ,Minister of the Minister of the Government of the Government of Kumarubarubaran ,Chennai ,Minister ,Kumarubaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்