×

‘நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டம்’: வார்டுக்கு 100 பேரை குவிக்க ஏற்பாடு..அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..!!

சென்னை: நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டிருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுகவினர் அத்துமீறல்: அமைச்சர் குற்றச்சாட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவின்போது அதிமுகவினர் அத்துமீறி நடந்து கொண்டனர். விதிகளை மீறி அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாக்கு சாவடிக்குள் சென்றதாக அமைச்சர் குற்றம்சாட்டினார். ‘வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடபட அதிமுக சதி’நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டுள்ளது. ஒரு வார்டுக்கு 100 பேர் வீதம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் நடந்த ரகசிய கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட திட்டம் வகுக்கப்பட்டது என்று செந்தில்பாலாஜி தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் அதிமுக முயற்சிகளை எதிர்கொள்வதற்கு திமுக முகவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவினர் வன்முறையில் இறங்கினாலும் திமுகவினர் அமைதி காக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெற திமுகவினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்….

The post ‘நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டம்’: வார்டுக்கு 100 பேரை குவிக்க ஏற்பாடு..அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : ward Minister ,Senthilbalaji ,Chennai ,Electricity Minister ,Chenthilbalaji ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...