×

பிரெஞ்ச் பன்னாட்டு திரைப்பட விழா உதயநிதி ஸ்டாலினுக்கு விருது

சென்னை: கடந்த 2019ல் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளிவந்த படம் ‘கண்ணே கலைமானே’. விவசாய துறையில் பட்ட படிப்பை முடித்து இயற்கை விவசாயம் செய்து வரும் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் அதே ஊரில் வங்கி மேலாளராக வரும் தமன்னா இருவருக்குமிடையேயான காதலை விவசாயம் மற்றும் அதை சுற்றி நிகழும் அரசியலுடன் பேசியது இப்படம். தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய இப்படத்திற்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்தோ – பிரெஞ்ச் பன்னாட்டு திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விருதினை தமன்னாவும், சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு வடிவுக்கரசியும் விருது பெற்றனர். மேலும் சிறந்த திரைப்பட தயாரிப்பாளர் விருதினை உதயநிதி ஸ்டாலின் வென்றுள்ளார். இதையடுத்து இந்த தகவல் இணையத்தில் வெளியானது. ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் விருது வென்ற உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமியை வாழ்த்தி வருகின்றனர்.

The post பிரெஞ்ச் பன்னாட்டு திரைப்பட விழா உதயநிதி ஸ்டாலினுக்கு விருது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : French International Film Festival Award ,Udayanidhi Stalin ,Chennai ,Tamannaah ,French International Film Festival ,Udhayanidhi Stalin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...