×

தேசிய பங்கு சந்தையில் முறைகேடு சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை: வெளிநாடு தப்புவதை தடுக்க லுக்அவுட் நோட்டீஸ்

புதுடெல்லி: தேசிய  பங்கு சந்தையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அதன் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ நேற்று பல மணி நேரம் விசாரணை நடத்தியது. மேலும், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா. இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம்  ஆலோசனைகளை கேட்டு பல்வேறு முடிவுகளை எடுத்ததாக  குற்றச்சாட்டு எழுந்தது. பங்கு சந்தையில் எந்த அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியத்தை, சாமியாரின் பரிந்துரையை ஏற்று தனது ஆலோசகராகவும், தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும் நியமித்தார். அவருக்கு ஆண்டுக்கு  ரூ4 கோடி சம்பளமும் வழங்கினார். இவர்கள் இருவரும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஏராளமான புகார்களும் வந்தன.   இந்நிலையில், வ ரி ஏய்ப்பு குற்றச்சாட்டு தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியனின் வீடுகளில்  வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். மேலும், பங்கு சந்தையின் ஏற்றம் இறக்கங்கள் குறித்து உடனே தெரிந்து கொள்வதற்கு வசதியாக, டெல்லியை சேர்ந்த ‘ஒபிஜி செக்யூரிட்டிஸ் பிரைவேட் லிட்’  என்ற நிறுவனத்தின் சர்வரை தேசிய பங்கு சந்தை அலுவலகத்தில் வைக்கவும் அனுமதி அளித்ததாக சித்ரா மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அவர் மீது அடுக்கடுக்காக புகார்கள் வரும் நிலையில், சிபிஐ நேற்று அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியது. மேலும், ஓபிஜி செக்யூரிட்டிஸ் உரிமையாளர் சஞ்சய் குப்தா மீதும் சிபிஐ வழக்கு செய்துள்ளது. 2010ம் ஆண்டில் நடந்த மோசடிகளுக்கு தேசிய பங்கு சந்தை அதிகாரிகள், செபி அதிகாரிகள் உடந்தையாக இருந்தது குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தீவிரமாகி வருவதால்,  சித்ரா ராமகிருஷ்ணாவும், ஆனந்த் சுப்ரமணியனும் நாட்டை விட்டு தப்பி விடாமல் தடுக்க, விமான நிலையங்கள், துறைமுகங்களில் அவர்களுக்கு  எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.     இ-மெயில் உத்தரவுகளை செயல்படுத்திய சித்ராயாருமே நேரில் பார்த்திராத, முன்பின் தெரியாத ‘சிரோன்மணி’ என குறிப்பிடப்படும் அந்த இமயமலை சாமியாருடன், சித்ரா ராமகிருஷ்ணா அடிக்கடி rigyajursama@outlook.com இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். உதாரணமாக 2015ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி மற்றும் 24ம் தேதியில் மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், லாலா என்பவர் தற்போதைய பதவியிலேயே இருக்க வேண்டும், கசம் துணை தலைமை கட்டுப்பாட்டு அதிகாரியாக, அதே அந்தஸ்தில் நியமிக்கப்பட வேண்டும். நிஷா என்பவர் கசமின் பதவியை வகிக்க வேண்டும். அவர் லாலாவிடம் தனது பணிகள் நிலை பற்றி தெரிவிக்க வேண்டும். இதுபோல், மயூர் என்பவர் வர்த்தக செயல்பாடுகளை கவனிக்கும் முதன்மை அதிகாரியாகவும், உமேஷ் முதன்மை தகவல் தொழில்நுட்ப அதிகாரியாகவும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல், எந்த அதிகாரியை எங்கு வைக்க வேண்டும், எந்த பதவியில் அமர்த்த வேண்டும், பணி விவரம், பொறுப்புகள் அனைத்தையும் அந்த சாமியாரே முடிவு செய்துள்ளது, விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது.மடிக்கணினியில் மர்மம்சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்திய செபி உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த அறிக்கையில், எர்னஸ் அண்ட் யங் நிறுவனம் அளித்த தணிக்கை அறிக்கையில், சித்ரா ராமகிருஷ்ணா பயன்படுத்திய மடிக்கணினி (லேப்டாப்) உட்பட கணினிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்படவில்லை. அவை அனைத்தும் மின்னணு கழிவுகளாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மடிக்கணியை அவசரம் அவசரமாக அப்புறப்படுத்த வேண்டிய அவசரம் என்ன, இந்த விஷயத்தை மறைப்பதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக, பங்குச்சந்தை வட்டாரத்தில் கூறப்படுகிறது.கடலில் உல்லாச குளியல்சித்ரா ராமகிருஷ்ணன் 2 குழந்தைகளுடன் நியூசிலாந்துக்கு செல்ல வேண்டும் என சாமியார் மெயிலில் குறிப்பிட்டுள்ளார்.  2 குழந்தைகள் என வேறு யாரையோ குறிப்பிட்டிருக்கலாம் என்கிறது செபி வட்டாரம். அதேநேரத்தில், நியூசிலாந்து பயணத்துக்கு முன்பு செஷல்ஸ் தீவுக்கு ராமகிருஷ்ணா செல்ல சாமியார் விருப்பம் தெரிவித்துள்ளார். செஷல்ஸ், வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்க பூமியாகவும், கருப்பு பணம் பதுக்கி வைக்கும் இடமாகவும் கருதப்பட்டது. எனவே இந்த பயணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. செஷல்ஸ் தீவுக்கு செல்லும் உனக்கு நீச்சல் தெரியுமா? கடலில் நீச்சல் அடிக்க தெரிந்திருந்தால், உற்சாகத்தை அனுபவிக்க முடியும். அதன்பிறகு கடற்கரையில் ஓய்வெடுக்கலாம். சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் வழியாக செஷல்ஸ் செல்லலாம் என சாமியாரிடம் இருந்து வந்ததாக கூறப்படும் இமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.‘நீ ரொம்ப அழகா இருக்கே ஹேர் ஸ்டைலையும் மாத்து’சித்ராவின் ஹேர் ஸ்டைல் எப்படி இருக்க வேண்டும் என்பதை சாமியாரே முடிவு செய்துள்ளார். அவரிடம் இருந்து வந்ததாக கூறப்படும் ஒரு இ-மெயிலில், ‘இன்று நீ மிகவும் அழகாக இருக்கிறாய். இருப்பினும், உனது ஹேர் ஸ்டைலை நீ இன்னும் மாற்றிக் கொள்ள வேண்டும். வித விதமான அலங்காரங்களை செய்ய கற்றுக்கொள். இது உன்னை மேலும் அழகாக்கும். இலவச அறிவுரைதான். இது உனக்கு புரியும் என நினைக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது….

The post தேசிய பங்கு சந்தையில் முறைகேடு சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை: வெளிநாடு தப்புவதை தடுக்க லுக்அவுட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : CPI ,Chitra Ramakrishna ,New Delhi ,CBI ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...