×

1.15 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது

சென்னை: சென்னையில் பொதுமக்களுக்கு மானியம் முறையில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயல்வதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் மதன் குமார் தலைமையிலான போலீசார் ேநற்று முன்தினம் பல்லவன் சாலை, சத்தியவாணி முத்து நகர் பாலத்தின் கீழ் ரயில் மூலம் கடத்த தயாராக வைத்திருந்த 50 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகள் கொண்ட 1.15 டன் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.உடனே குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும், ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த யாலகுல சுரேஷ் பாபுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது….

The post 1.15 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Civicianship Supply Offender Investigation Division ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில் சேவை பாதிப்பு