×

சிரஞ்சீவியின் தம்பி மகள் நடிகை நிஹாரிகா விவாகரத்து

ஐதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா. அவர் நடிகையாக அறிமுகம் ஆகி சில படங்களில் நடித்து இருக்கிறார். விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்தார். 2020 டிசம்பர் மாதத்தில் சைதன்யா என்பவரை நிஹாரிகா திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக இந்த வருட தொடக்கத்தில் இருந்தே செய்திகள் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல்படி நிஹாரிகா சைதன்யாவை சட்டப்படி விவாகரத்து செய்து இருக்கிறார். இருவரும் ஒப்புக்கொண்டு பரஸ்பர விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்ததால் தற்போது சட்டப்படி அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

The post சிரஞ்சீவியின் தம்பி மகள் நடிகை நிஹாரிகா விவாகரத்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chiranjeevi ,Niharika ,Hyderabad ,Nagendra Babu ,Vijay Sethupathi ,Niharika Divorce ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திரிஷா, குஷ்புவிடம் நஷ்ஈடு கேட்ட...