×

அதிக சிரமத்துக்கு ஆளான தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கும் தமன்னா, தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் ‘ஜெயிலர்’, தெலுங்கில் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் சிரஞ்சீவி ஜோடியாக ‘போலா சங்கர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ என்ற வெப்தொடரில் முத்தக்காட்சி மற்றும் பெட்ரூம் காட்சியில் மிகவும் துணிச்சலாக நடித்துள்ளார். இதுகுறித்து தமன்னா கூறுகையில், ‘நான் நடித்த ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ல் இடம்பெற்ற காட்சிகள் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை, ஒரு நடிகையாக ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு பயணமாகவே நினைக்கிறேன். ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ காட்சிகளை எனது குடும்பத்துடன் பார்த்தபோது மிகவும் சிரமப்பட்டேன். படபடப்புடன் அசவுகரியமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். மற்றபடி நான் ஒரு நடிகையாக என்னை நினைத்து, அதற்கான பணிகளைச் செய்து மகிழ்ச்சி அடைகிறேன். ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ஐ ரசிகர்கள் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் பார்த்து ரசிக்க வேண்டும்’ என்றார்.

The post அதிக சிரமத்துக்கு ஆளான தமன்னா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tamanna ,Tamannaah ,Nelson Dilipkumar ,Rajinikanth ,Meher Ramesh ,Chiranjeevi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில்...