×

சென்னையில் 1,198 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தகவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையுடன் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன் தீப் சிங் பேடி நேற்று ஆலோசனை நடத்தினார். ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் 45 பறக்கும் படை செயல்பட்டு வருகிறது. கூடுதலாக ஒரு மண்டலத்திற்கு 3 குழுக்கள் என 15 மண்டலத்திற்கும் 45 குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்தக்குழு 17ம் தேதி காலை முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். மேலும், பணப்பட்டுவாடா மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 1800 4257 012 என்ற இலவச புகார் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை 55 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.மேலும், 5794 வாக்கு மையங்களில் கேமரா பொருத்தும் பணி நாளை முதல் நடைபெறும். தேர்தல் பணியில் ஈடுபடும் 27,812 அதிகாரிகளுக்கு கணினி மூலம் 18ம் தேதி பயிற்சியளிக்கப்பட உள்ளது. அன்றே வாக்குபதிவு உபகரணங்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். சென்னையில் உள்ள மொத்த வாக்குப்பதிவு மையங்களில் 1,198 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவையாக உள்ளது. இந்த மையங்களில் 267 நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த மையங்களில் கூடுதலாக கேமரா மூலமும் கண்காணிக்கப்படும்.  மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவியாக 1368 சக்கர நாற்காலிகள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களில் 14,520 நபர்களுக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளது….

The post சென்னையில் 1,198 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Electoral Officer ,Gagandeepsingh Bedi ,Chennai Municipal Corporation Commissioner ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ல் நடைபெறவுள்ள வாக்கு...