×

காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபுவை ஆதரித்து திருநாவுக்கரசர், திருமாவளவன் பிரசாரம்

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபுவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் நேற்று வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘‘உள்ளாட்சியில் நல்லாட்சி மலர  திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். டில்லிபாபு வெற்றி பெற்றதும் இந்த பகுதி பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்படும்,’’ என்றார்.இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, நேற்று டெல்லிபாபுவுக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘‘வேட்பாளர் டில்லிபாபு, இந்த பகுதி மக்களின் நலனுக்காக பாடுபடும் நபர். அவரது வெற்றிக்காக இந்த வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் களப்பணியாற்ற வேண்டும். அவர் வெற்றி பெற்றால், இங்குள்ள மக்கள் பிரச்னைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்பார்,’’ என்றார். முன்னதாக, திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வாக்கு சேகரிப்பின் போது பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் உடனிருந்தார்….

The post காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபுவை ஆதரித்து திருநாவுக்கரசர், திருமாவளவன் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Thirunavukarasar ,Thirumavalavan ,Congress ,Tillibabu ,Perambur ,37th Ward ,Congress Party ,North Chennai West ,DMK Alliance ,
× RELATED பிரதமர் மோடி அண்மை காலமாக...