×

பேத்திக்கு பெயர் சூட்டிய சிரஞ்சீவி

ஐதராபாத்: சிரஞ்சீவி மகனும், நடிகருமான ராம் சரண், கடந்த 2012 ஜூன் 14ம் தேதி உபாசனா என்ப வரை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ராம் சரண், உபாசனா தம்பதிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதையறிந்த ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் ராம் சரண், உபாசனா தம்பதியை வாழ்த்தினர். இந்நிலையில் ராம் சரண், உபாசனா தம்பதியின் குழந்தைக்கு ஐதராபாத்தில் பெயர் சூட்டும் விழா நடந் தது. பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். ராம் சரணின் மகளுக்கு ‘கிளின் காரா கொனிடேலா’ என்று பெயர்சூட்டப்பட்டது.

அப்போது சிரஞ்சீவி பேசுகையில், ‘பல வருட இடைவெளிக்குப் பிறகு எங்கள் வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றி இருக்கிறார். ராம் சரண் தந்தையானதும் எங்கள் நண்பர்களிடம் இருந்தும், உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் உள்பட அனைவரும் தங்களின் அன்பையும், வாழ்த்தை யும் பொழிந்து வருகின்றனர்’ என்றார். ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம் சரணும், மெஹர் ரமேஷ் இயக்கும் தமிழ் ‘வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா சங்கர்’ என்ற படத்தில் சிரஞ்சீவியும் நடித்து வருகின்றனர்.

The post பேத்திக்கு பெயர் சூட்டிய சிரஞ்சீவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chiranjeevi ,Hyderabad ,Ram Charan ,Upasana ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஹைதராபாத்தில் திருமணத்திற்கு முன்பு...