×

குருவாயூர் கோயிலில் யானைகள் ஓட்டப்பந்தயம்

பாலக்காடு: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயில் திருவிழா, யானைகள் ஓட்டப்பந்தயத்துடன் நேற்று துவங்கியது. ரவிகிருஷ்ணன், தேவதாஸ் மற்றும் விஷ்ணு என்ற தேவஸ்தான வளர்ப்பு யானைகள் மட்டுமே பந்தயத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. கோயில் கிழக்கு நடையில் 3 யானைகளும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது யானையின் கழுத்தில் பாகன்கள் மணி கட்டினர். சசிமாரார் சங்குநாதம் முழங்க யானைகள் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதை பார்க்க சாலைகளின் இரு புறங்களிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.இதில் ரவிகிருஷ்ணன் என்ற யானை முதலிடம் பிடித்தது. தேவதாஸ் யானை 2ம் இடமும், விஷ்ணு என்ற யானை 3ம் இடத்தையும் பிடித்தது. ரவிகிருஷ்ணன் என்ற யானை கிழக்கு கோபுர வாயில் முன்பாக கோயிலுக்குள் நுழைந்து கோயிலை உள்பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து கொடிமரத்தின் முன்பாக கிருஷ்ணரை வணங்கி நின்றது. தொடர்ந்து நடக்கும் திருவிழா நாட்களில் கோயிலின் உற்சவமூர்த்தியை ரவிகிருஷ்ணன் என்ற யானை மீது மட்டுமே ஏற்றிவலம் வருவார். இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் கோயிலின் தங்க கொடிமரத்தில் கோயில் தந்தரி தலைமையில் விழா கொடியேற்றம் நடைபெற்றது….

The post குருவாயூர் கோயிலில் யானைகள் ஓட்டப்பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Elephant race ,Guruvayur ,Palakkad ,Guruvayur temple festival ,Kerala ,Ravikrishnan ,Devdas ,Vishnu… ,Elephant race at Guruvayur temple ,Dinakaran ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...