×

விறு விறுவென படப்பிடிப்பு நடைபெற்று வரும் விஜய் ஆண்டனியின் “வள்ளி மயில்” திரைப்படம்

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, “பிச்சைக்காரன் 2” படத்தை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் “வள்ளி மயில்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பரியா அப்துல்லா நடிக்கிறார்.

மேலும் பாரதிராஜா, சத்யராஜ், சுனில், தம்பி ராமையா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு டி.இமான் இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை தாய் சரவணன் தயாரிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறுகையில்; “1980களில் நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான திரில்லர் படமாக “வள்ளி மயில்” உருவாகிறது. 1980 காலகட்ட கதை என்பதால் திண்டுக்கல் நகரில் அன்றைய காலகட்ட பின்னணியை கண்முன் கொண்டு வரும் வகையில் பிரமாண்ட செட் அமைத்து இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது” என்றார்.

“வள்ளி மயில்” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு திண்டுக்கல், கொடைக் கானல், பழனி, மதுரை, சிறுமலை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

The post விறு விறுவென படப்பிடிப்பு நடைபெற்று வரும் விஜய் ஆண்டனியின் “வள்ளி மயில்” திரைப்படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Antony ,Suchinthran ,Baria Abdullah ,Bharathiraja ,Sathyaraj ,Sunil ,Thambi Ramaiah ,GPMuthu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரோமியோவுக்கு எடிட்டிங் செய்யும் விஜய் ஆண்டனி