×

டிமான்ட்டி காலனி 2’ஹாரர் திரில்லர் கதையில் அருள்நிதி

சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இதில் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் கதை கொண்ட இப்படத்தை ஒயிட் லைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஞானமுத்து பட்டறை சார்பில் அஜய் ஞானமுத்து, விஜய் சுப்பிரமணியன் இணைந்து தயாரித்துள்ளனர். 2015ல் ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் முதல் பாகம் வெளியானது. இது வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக அமைந்ததால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. 7 வருடங்கள் கழித்து 2ம் பாகம் உருவாகியுள்ளது. ஓசூர், சென்னை மற்றும் ஆந்திர மாநில எல்லையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதால், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகிறது. ஏற்கனவே ‘டிமான்ட்டி காலனி 2’ படத்துக்கான அறிமுக போஸ்டர், க்யூஆர் கோடு முறையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post டிமான்ட்டி காலனி 2’ஹாரர் திரில்லர் கதையில் அருள்நிதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arulfiniti ,Chennai ,Arulnidhi ,Ajay Ghanamutu ,Priya Bhavani Sankar ,Arun Pandiyan ,Muthukumar ,Meenathchi Govindarajan ,Archana Ravichandran ,Harish Kannan ,Sam C. S ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...