×

அணை, ஏரிகளில் திறக்கப்படும் தண்ணீரை கடத்தி செல்லும் வகையில் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத கால்வாய்கள் மறுசீரமைப்பு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: தமிழகத்தில் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு ஆதாரமாக மேட்டூர், வைகை, பெரியாறு, பாபநாசம், மணிமுத்தாறு உட்பட 90 அணைகள் மற்றும் 14,098 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இந்த, அணை மற்றும் ஏரிகள் மூலம் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்காக, கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி அமைக்கப்பட்ட கால்வாய்கள் பல ஆண்டுகளாக மறு சீரமைப்பு செய்யப்படாமல் உள்ளன. இதனால், அந்த கால்வாய்கள் நீர் கடத்தும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்வாய்கள் மூலம் முழு நீரையும் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகளின் கால்வாய் மற்றும் இணைப்பு கால்வாயை ஆய்வு செய்ய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மண் தன்மை ஆராய்ச்சி கோட்டத்தின் சார்பில் பொறியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் முக்கிய அணைகளில் சேதமடைந்த கால்வாய், இணைப்பு கால்வாயை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் கால்வாய் மற்றும் இணைப்பு கால்வாய்களில் இரண்டு பக்கமும் தடுப்பு சுவர் மற்றும் தரையில் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டது. இவ்வாறு கால்வாய் அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயராது. எனவே, தரையில் சிமென்ட் தளம் அமைக்காமல் கால்வாய் அமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர்மட்டம் பெருக வாய்ப்புள்ளது. எனவே, இந்த முறை கால்வாய்களில் நீர் கடத்தும் திறனை மேம்படுத்துவதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுக்கு பிறகு, கால்வாய், இணைப்பு கால்வாய்களை புனரமைக்கும் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக, மண் தன்மை ஆராய்ச்சி கோட்டத்தின் ஒத்துழைப்புடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து, இந்த ஆய்வு தகவல்களை வைத்து அறிக்கைதயார் செய்யப்படுகிறது….

The post அணை, ஏரிகளில் திறக்கப்படும் தண்ணீரை கடத்தி செல்லும் வகையில் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத கால்வாய்கள் மறுசீரமைப்பு: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mattur ,Vaigai ,Periyaru ,Babanasam ,Manimutharu ,Tamil Nadu ,
× RELATED நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும்...