×

ராஜமெளலி, மகேஷ்பாபு இணையும் திரைப்படம் த்ரில்லுடன் எமோஷனும் கலந்திருக்கும்: விஜயேந்திர பிரசாத் பேட்டி

ஹைதராபாத்: இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ராஜமெளலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் வேரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

இந்நிலையில் மாபெரும் வெற்றிபெற்ற ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜமெளலி, நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். மகேஷ்பாபுவின் பிறந்த நாளையொட்டி ஆக. 9ம் தேதி இந்தப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படத்திற்கும் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுதியிருந்தார். அதேபோல் ராஜமெளலி, மகேஷ்பாபு இணையும் திரைப்படத்திற்கும் விஜயேந்திர பிரசாத் கதை எழுத உள்ளார்.

இதன் கதை குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்; ‘இண்டியானா ஜோன்ஸ்’ படங்களில் ஒன்றான ‘ரைடர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க்’ படம் போன்று இந்த படம் இருக்கும். த்ரில்லுடன் எமோஷனும் கலந்திருக்கும். ஜூலை மாதத்துக்குள் கதையை எழுதி முடிக்க வேண்டும். கிளைமாக்ஸ் ஒரே படத்துடன் முடிவது போல இருக்காது. தொடர்ச்சிக்கான வழியுடன் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

The post ராஜமெளலி, மகேஷ்பாபு இணையும் திரைப்படம் த்ரில்லுடன் எமோஷனும் கலந்திருக்கும்: விஜயேந்திர பிரசாத் பேட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajamelali ,Mahesh Babu ,Vijayendra Prasad ,Hyderabad ,India ,Raja Melali ,Ramcharan, Jr. ,NTR ,Alia Bhatt ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED யுபிஐ செயலியில் பரிவர்த்தனை அறிவிக்க...