×

ஆண்டு வருமானத்தில் 30 சதவீதம் தொண்டு: மகேஷ் பாபு தாராளம்

ஐதராபாத்: மகேஷ் பாபு தனது ஆண்டு வருமானத்தில் 30 சதவீதத்தை நன்கொடையாக வழங்குகிறார், எனவே அவர் ஆண்டுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி பணத்தை தொண்டு செயல்களுக்கு வழங்குகிறார். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் மகேஷ் பாபு. மேலும் சில தொண்டு நிறுவனங்களை அவரே நடத்தி வருகிறார். இந்த அமைப்புகளில் ஒன்று ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் ஏழை குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுகிறார்.

இன்றுவரை இந்த முயற்சியின் மூலம் 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அத்தியாவசிய இதய அறுவை சிகிச்சையை வழங்கியுள்ளார். இவை தவிர மகேஷ் பாபு இரண்டு கிராமங்களை (அவரது மூதாதையர் கிராமம் உள்பட) தத்தெடுத்துள்ளார். அங்கு அவர் சாலைகள், மின்சாரம், பள்ளி மற்றும் சுகாதார வசதிகள் உள்பட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கியுள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் நேற்று அதிகமாகப் பகிரப்பட்டது.

 

The post ஆண்டு வருமானத்தில் 30 சதவீதம் தொண்டு: மகேஷ் பாபு தாராளம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mahesh Babu ,HYDERABAD ,Mahesh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆந்திரா, தெலங்கானாவுக்கு பிரபாஸ் ரூ.5 கோடி, சிரஞ்சீவி ரூ.1 கோடி