×

மறைமலைநகர் நகராட்சி 12வது வார்டில் திமுக வேட்பாளர் ஜெ.சண்முகத்துக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

செங்கல்பட்டு: மறைமலைநகர் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலருக்கு திமுக சார்பில் மறைமலைநகர் நகர திமுக செயலாளரும் முன்னாள் நகர மன்ற துணை தலைவருமான  ஜெ.சண்முகம் போட்டியிடுகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் அனைவருக்கும் நல்ல அறிமுகமானவர்.இதையொட்டி, அந்த வார்டில் வெற்றிப்பெற்று பல்வேறு மக்கள் நலப்பணிகளை நிறைவேற்றியுள்ளார். இதனால் அந்த வார்டில் ஜெ.சண்முகத்துக்கு பொதுமக்களின் ஆதரவு  அதிகளவில் உள்ளது.கடந்த 4ம்தேதி மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில்  செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில், கூட்டணி கட்சியினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் வந்து ஜெ.சண்முகம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அவர், 12வது வார்டுக்கு உட்பட்ட குலேசகர ஆழ்வார் தெரு, கலைவாணர் தெருவில் நேற்று வீடுவீடாக சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து  தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்யவேண்டும் என ஆதரவு திரட்டினார். அவருக்கு, பொதுமக்கள் ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.இதில் திமுக நிர்வாகிகள் இரா.குணசேகரன், சா.லெனின், இளங்கோவன், நீலகண்டன், கணேஷ் சுந்தர், லோகநாதன், வெங்கட் , விவேகாந்தன், லாரன்ஸ், அய்யனார், சந்துரு, ராமதாஸ், முருகேசன், அருள்மணி, உதயா, அதிபதி, தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post மறைமலைநகர் நகராட்சி 12வது வார்டில் திமுக வேட்பாளர் ஜெ.சண்முகத்துக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Kazhagam ,12th ,Ward ,Municipal ,Municipal Municipality ,J.J. ,Chalmumpat. Chengalputtu ,12th Ward ,Councillor ,Municipal Municipal Municipality ,Kanjagam ,Municipality ,Sangmutham ,
× RELATED ராவிடர் கழகம் சார்பில் பெரியார் உருவ சிலைக்கு மரியாதை