×

போக்குவரத்து மிகுந்த சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிய சென்னை மாநகராட்சி திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா?: உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: கால்நடைகள் சுற்றித்திரிய சென்னை மாநகரம் திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்க கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சென்னையில் தெரு நாய்கள் மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகள் சாலைகளில் திரிகின்றன. போக்குவரத்து மிகுந்த கடற்கரை சாலையிலும் கால்நடைகள் கடந்து செல்வதை பார்க்க முடிகிறது.மாநகராட்சிக்கு வெளியில்தான் கால்நடைகள் இருக்க வேண்டும். நகருக்குள் இருப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.அதற்கு மாநகராட்சி வழக்கறிஞர், கால்நடைகளின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு மீண்டும் சாலையில் விடமாட்டோம் என்ற உத்தரவாதம் பெறப்பட்டு அதன் பிறகு அந்த கால்நடைகள் விடுவிக்கப்படுகின்றன. மாநகராட்சி சட்டப்படி பன்றிகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகரம் திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா?. மாநகராட்சி பகுதியில் கால்நடைகளுக்கு தடைவிதிக்கும் விதிகள் ஏதும் இல்லை என்றால் அதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் எனக் கூறி விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்….

The post போக்குவரத்து மிகுந்த சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிய சென்னை மாநகராட்சி திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா?: உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,High Court ,Chamari ,Chennai ,Chennai High Court ,
× RELATED லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது