×
Saravana Stores

திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

பள்ளிப்பட்டு: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சிகளில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பொதட்டூர்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில், பேரூர் செயலாளர்கள் டி.ஆர்.கே.பாபு, எம்.ஜோதிகுமார் ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எம்.பூபதி, எஸ்.சந்திரன் எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி கடந்த 8 மாதங்களாக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து சென்றடைய உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் திமுகவினர் வெற்றி பெற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும். பொதட்டூர்பேட்டையில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தவும், பொதட்டூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனை விரிவுப்படுத்த அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதில், மாநில நெசவாளரணி துணை தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜி.ரவீந்திரா, சி.ஜே.சீனிவாசன், என்.கிருஷ்ணன், ஆர்த்திரவி, பி.பழனி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் இ.கே.உதயசூரியன், மா.ரகு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.சுகுமாரன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பொன்னேரி திமுக நகர அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் திமுக மாவட்ட செயலாளர் டி.ஜே.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பொன்னேரி நகராட்சியில் போட்டியிடும் 27 வார்டு வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து விளக்கினார். இதேபோல் மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் 18-வார்டு வேட்பாளர் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் டி.ஜ.கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், பொதுக்குழு உறுப்பினர்கள் மீவி கோதண்டம். கே.எஸ்.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மீன்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். பேரூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தினார்….

The post திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanjagam ,Djagagam ,Dizzagam ,Padhatturbate ,Kazhagam ,Dinakaran ,
× RELATED வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட பணிகளை...