×

நிதின் கட்கரியின் வீட்டுக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

நாக்பூர்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக நிதின் கட்கரி பதவி வகித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். நாக்பூர் சவுக் காம்ளா பகுதியில் கட்கரியின் அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் நிதின் கட்கரியின் வீட்டுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் குழுவினர் அமைச்சரின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
விசாரணையில் நாக்பூரைச் சேர்ந்த உமேஷ் விஷ்ணு ரவுத் என்பவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

 

The post நிதின் கட்கரியின் வீட்டுக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nitin Gadkari ,Nagpur ,Union Minister ,Road Transport and ,Maharashtra ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...