சென்னை: அண்ணா பல்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் 11ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக 4 வளாக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் ஆகிய படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 11ம் தேதி முதல் துவங்கும். முன்னதாக ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் நடைபெறும். வகுப்புகள் தொடங்கிய பின்னர் மாணவர்களுக்கான இறுதி வேலை நாள் டிசம்பர் 10ம் தேதி. செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 16ம் தேதி தொடங்கும்.
செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்து அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜனவரி 5ம் தேதி (5.1.2026) அன்று தொடங்கும். அதேபோல, அண்ணா பல்கலை இணைப்பு நிறுவனம் மற்றும் தனியார் கல்லூரிகளில் பிஇ., பி.டெக் மற்றும் பி.ஆர்க் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி வகுப்புகள் துவங்கி டிசம்பர் 10ம் தேதியுடன் முடிகிறது. ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகளும், முதல் செமஸ்டர் டிசம்பர் 16ம் தேதி தொடங்கி, தேர்வு முடிந்து அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜனவரி 5ம் தேதி தொடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அண்ணா பல்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு 11ம் தேதி வகுப்புகள் தொடக்கம் appeared first on Dinakaran.
