×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெள்ளிக்கிழமையான நேற்று 70,353 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,636 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.65 கோடி காணிக்கை செலுத்தினர். சனிக்கிழமையொட்டி இன்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 6 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupathi Eumalayan Temple Thirumalai ,Tirupathi Elumalayan Temple ,Swami ,Swami Daryanam Devotees Temple ,Tirupathi Eumalayan Temple ,
× RELATED நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப்...