×

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி அணி கோப்பை வென்றது

 

ஜெயங்கொண்டம், ஆக.2: ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கிரிக்கெட் அணி மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்று முதல்பரிசு பெற்றது. அரியலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி ஜெயங்கொண்டம், மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கடந்த 29ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியானது பல்வேறு நிலைகளில் நடைபெற்றுது.

பல்வேறு கல்லூரிகளிலிருந்து 11 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இறுதிப்போட்டியில் ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்று பரிசுக் கோப்பையை வென்றது. பரிசுக்கோப்பையை வென்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்(மு.கூ.பொ) முனைவர் ராசமூர்த்தி , முன்னாள் முதல்வர் முனைவர் ரமேஷ் , உடற்கல்வி இயக்குநர் முனைவர் அன்பரசன் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

The post மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி அணி கோப்பை வென்றது appeared first on Dinakaran.

Tags : Jayankondam Government College ,Jayankondam ,Jayankondam Government Arts and Science College ,Ariyalur District Cricket Association ,Modern ,Dinakaran ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா