ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன.30: ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் 70 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சரஸ்வதி காளீஸ்வரன், புஷ்பம் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் பேசினார். வட்டக்கிளை பொருளாளர் ரத்தினம் நன்றி தெரிவித்து பேசினார்.
