விருதுநகர், ஜன. 30: விருதுநகர் தாசில்தார் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வட்டத் தலைவர் முனியசாமி, மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் நவீனமயமாக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் வேண்டும்.
பதவி உயர்வில் கால வரம்பை மூன்று ஆண்டுகளாக மாற்ற வேண்டும், டி.எஸ்.எல்.ஆர் மற்றும் பட்டா மாறுதலில் முதன்மைச் செயலாளரின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
