×

பெரியகுளம் கல்லூரியில் நாளை குறள் வாரவிழா

தேனி, ஜன. 30: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஒவ்வொரு ஆண்டும் குறள்வாரம் கொண்டாடப்பெறும் எனவும், அவ்வறிவிப்பை செயற்படுத்திடும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு, திருக்குறள் நாட்டிய நாடகம், திருக்குறள் இசைநிகழ்ச்சி, திருக்குறள் பட்டிமன்றம் மற்றும் திருக்குறள் நாட்டிய நாடகம், இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்திடுமாறு உத்தரவிட்விட்டார்.

அதனடிப்படையில், திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வகையில் குறள் வாரவிழாவின் ஒருநிகழ்வாக திருக்குறள் நாட்டிய நாடகம் /இசை நிகழ்ச்சி நாளை (31-ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பெரியகுளம், மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக நடைபெறும் திருக்குறள் நாட்டிய நாடகம் , இசை நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

 

Tags : Kural Week ,Periyakulam College ,Theni ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Ayyan Thiruvalluvar ,Kanyakumari district ,
× RELATED விஏஓ அலுவலகம் கட்ட கோரிக்கை